அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

12/11/17

புது வெள்ளை மழை :)

போன வார துவக்கத்திலேயே எங்களுக்கு வாரக்கடைசியில் பனிப்பொழிவு இருக்கும்னு எச்சரித்து இருந்தார்கள் ..
ஜெர்மனில எப்பவும் டிசம்பர் டு பிப்ரவரி ஸ்னோ கொட்டினாற்போலவே   இருக்கும் ..அதுவும் white கிறிஸ்துமஸ் வராத வருஷமேயில்லை எனலாம் ..ஆனா இங்கே இங்கிலாந்து வெதர் படு குளிர் ..ஆனா ஸ்னோ கொட்டாது . எப்பவும் அதுவும் நாங்கள் வசிக்கும் பகுதி மழை மழையோ மழை .
ஸ்னோ கொட்டினாலும் உடனே கரைந்துவிடும் ..

12/7/17

அட்வென்ட் ஸர்ப்ரைஸ் :)

அட்வென்ட் ஸர்ப்ரைஸ் :) மற்றும் ஒரு பிறந்த நாள் கொண்டாட்டம் :)
===================================================================
இந்த அட்வென்ட் என்பது ஆலயங்களில்  ஒரு  ஞாயிறு நவம்பர் இறுதி முதல் துவங்கி கிறிஸ்துமஸ் வரை தொடர்ந்து நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் கிறிஸ்துபிறப்பின் வருகைக்காக ஆயத்தப்படுத்திக்கொள்ளும்  காலம் .
கிறிஸ்மஸ்னாலே  பரிசுப்பொருட்கள்தானே எல்லா குட்டீஸ் மற்றும் பெரியவங்களுக்கு இவ்வளவு என் வீட்டில் வளர்க்கும் நாலு கால் செல்லங்களுக்கும் இது கொஞ்சம் ஜாலியான காலம் தான் :)
கடைகளில் விற்கப்படும் அட்வென்ட் காலண்டர்கள் முதல் தேதி துவங்கி 24 வரை ஸ்வீட்ஸ் சாக்லேட்ஸ் அடைத்த காலண்டர் வடிவில் வரும் ஒவ்வொரு தேதியின் பின்னே உடைத்து பார்த்தால்  ஒரு சாக்லேட் இருக்கும் ..

11/30/17

லண்டன் ஸ்டைல் தட்டை இட்லி :)

                               


                       
         லண்டன் ஸ்டைல் தட்டை இட்லி :)    aka ராமசேரி இட்லி                          

சில நாட்கள் முன் தமிழ் ஹிந்து ஆன்லைன் எடிஷனில் இந்த ராமசேரி இட்லி பற்றி வாசித்தேன் :)  அப்போதிலிருந்து எனக்கு இது பற்றி அறிய ஆவல் அதிகமாகிடுச்சி ..நம்ம கூகிள் அங்கிளை நச்சு நை நைன்னு கேள்வி கேட்டு குடைந்து எடுத்ததில் கிடைத்தவைதான் கீழுள்ள ராமசேரி இட்லி பற்றிய பதிவுகள் காணொளிகள் .பதிவின் இறுதியில் இணைத்துள்ளேன் ..
உங்க எல்லாருக்குமே தெரியும் நான் ஒரு காரியத்தை எடுத்தா முடிக்காம விட மாட்டேன்னு :) இந்த பதார்த்தம் எனக்கு ஒரு சவாலாகவே அமைந்தது ..//நெல்லைத்தமிழன் எல்லா சமையலும்  உங்களுக்கு சவால்தானு // உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு கேக்குது :) ..

11/29/17

ஜெஸ் ..செயற்கை நுண்ணறிவு இயந்திரா !! ..Jess the AI Robot !மான்செஸ்டர் மற்றும் Plymouth பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு இந்த ஜெஸ் எனும் செயற்கை நுண்ணறிவு ரோபாட் .இன்று 10 மணிக்கு தொலைக்காட்சியில் இதைப்பற்றிய நிகழ்ச்சி ஒளிபரப்பானது .

இதுதான் ஜெஸ் 

11/21/17

என் வீட்டு தோட்டத்தில் :) Butterfly and Bumble beeவண்ணத்துப்பூச்சிக்கு கொஞ்சம் உணவு :)


                                                                               


எனக்கு சின்ன வயசில இருந்தே ஒரு பழக்கம் அது முதியோர் ,ஆதரவற்றோர் போன்ற மனிதர்களாக இருக்கட்டும்  சின்ன பறவையா இருக்கட்டும்  ரோட்டில் இருக்கும் நாய் பூனையா இருக்கட்டும் எதுவாக இருந்தாலும் பார்த்தா ஏதாவது உணவு கொடுப்பேன் .அப்படி கொடுத்து அவங்க சாப்பிடும்போது  நிறைவா   ஒரு சந்தோஷம் கிடைக்கும்.